இருபதாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது பக்திப் பாடல்களால் தமிழிசைக்கு ஒரு புதிய எழுச்சியினை தோற்றுவித்தவர்......!

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில், வேற்று மொழி கீர்த்தனைகளுக்கு, பாடலின் பொருள் விளங்காமல், வெறும் இராகத்திற்காகவும், இசைக்காகவும் தலையாட்டி வந்த தமிழ் மக்களுக்கு, எளிய மொழியில், இனிய தமிழில், தமிழிசையை அறிமுகம் செய்து வைத்தவர்......!

இவர்.... தமிழிசைக்கும், இறையுணர்விற்கும் இடையே பாலமாய் இருந்தவர்.

உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பெறும் இவர் விருந்தோம்பலில் நிகரற்றவர்.....!

ஏறக்குறைய நான்காயிரம் பக்தி இசைப் பாடல்களுக்கு மேல் இயற்றி சாதனை படைத்தவர்.....!

இவர் இருபதுக்கும் மேலான சிறந்த வடமொழி தோத்திரப்பாக்களை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். அவற்றுள் பம்பாய் சகோதரிகள் பாடிய T.Series தயாரிப்பில் வெளிவந்த ஸ்ரீ வெங்கேடச சுப்ரபாதம், வெளியிடப்பட்ட அன்றே ஒரு லட்சம் ஒலி நாடாக்கள் விற்றதனால் 'தங்கத்தகடு' (Golden Disk) விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் திரை இசைப்பாடல்கள், மொழிமாற்றப்பாடல்கள், கவிதைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பக்திப்பாடல்கள், தனி பாடல்கள் இயற்றுதல் போன்ற பல சிறப்புத் திறன்களைக் கொண்ட பன்முக ஆளுமை படைத்தவர்.