ஆசிரியராக
விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் : தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர் 1960-72 பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் "தமிழ்த்துறை" -S.I.V.E.T. கல்லூரி, சென்னை - 1972-74
அரசு நிர்வாகியாக உதவி இயக்குனர் - மொழிப்பெயர்ப்புத்துறை தலைமைச் செயலகம் - தமிழ்நாடு அரசு 1975 - 78. இயக்குனர் - தமிழ்ப் பண்பாட்டு மையம் தலைமைச் செயலகம் - தமிழ்நாடு அரசு 1978 - 81.
கவிஞனாக தமிழ்நாட்டின் தன்னிகரற்ற கவிஞர், உலகளாவிய புகழ் கொண்டவர். சமுதாயம், சான்றோர் தமிழ்மொழி , நாடு, தமிழ் இலக்கியம் போன்ற பல தலைப்புகளில் தமிழில் கவிதைகள் மற்றும் பக்திப் பாடல்கள் ஏறத்தாழ 4000 (நான்காயிரம்) பாடல்கள் அவரால் இயற்றப்பட்டு, ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசப்பற்றுடையவராக தேச ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அவை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையத்திலும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. தேசப்பற்று பாடல்களின் தொகுப்பான "செக்கர்வானம்" என்ற புத்தகத்தை இந்திய அரசு நூலாக வெளியிட்டுள்ளது.
கலைஞனாக புகழ் பெற்ற பாடல்கள் பல தமிழ் திரைப்படங்களுக்கும், நாட்டிய நாடகங்களுக்கும் இயற்றியுள்ளார்
பேச்சாளராக பல கவியரங்கங்களிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
எழுத்தாளனாக அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. |